ADDED : அக் 14, 2025 10:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; போத்தனூர், ஸ்ரீராம் நகர் அருகே மாநகராட்சி கழிவுநீர் பண்ணை வளாகம் உள்ளது. இதன் ஒரு பகுதியில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தினமும் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவு கொட்டப்படுகிறது.
இதனால் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர், காற்று மாசு, தொற்று நோய், துர்நாற்றம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் தொடர்கின்றன. காற்று வீசும்போது இத்துர்நாற்றம் தாங்க முடியாதாகி விடுகிறது.
இந்நிலை தான் கடந்த சில நாட்களாக ஸ்ரீராம் நகர், மேட்டூர், அன்பு நகர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் வசிப்போருக்கு ஏற்பட்டுள்ளது.
துர்நாற்றத்தை கட்டுப்படுத்த, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.