/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சதம்' அடிக்கப் போகுது வெயில்! நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கணும்
/
'சதம்' அடிக்கப் போகுது வெயில்! நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கணும்
'சதம்' அடிக்கப் போகுது வெயில்! நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கணும்
'சதம்' அடிக்கப் போகுது வெயில்! நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கணும்
ADDED : மார் 09, 2024 07:35 AM
உடுமலை : 'திருப்பூர் மாவட்டத்தில் வரும் வாரம், 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி, வெயில் சுட்டெரிக்கப் போகிறது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் வாரந்திர காலநிலை அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, 'இந்த வாரம், திருப்பூரில் வறண்ட வானிலையே காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி முதல், 39 டிகிரி செல்சியசாக இருக்கும். (100.4 முதல், 102.2 டிகிரி பாரன்ஹீட்) குறைந்தபட்ச வெப்பநிலை, 23 முதல், 25 டிகிரி செல்சியசாக பதிவாகும் வாய்ப்புள்ளது.
சராசரியாக, மணிக்கு, 6 முதல், 10 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. காலை நேர காற்றின் ஈரப்பதம், 70 சதவீதம்; மாலையில், 20 சதவீதமாக இருக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கோழி கொட்டகைகளில் காற்றோட்டம் ஏற்படுத்த, கொட்டகைகளுக்கு மேல் நிழலிட வேண்டும். கோழிக் கொட்டகையை சுற்றி, ஈரப்படுத்தப்பட்ட கோணிப்பை தொங்கவிட வேண்டும்.
நண்பகல் நேரங்களில், இது, வெப்பநிலையை குறைக்க உதவும். 45 முதல், 65 நாள் வயதுடைய மக்காச்சோள பயிருக்கு போதிய நீர்பாசனம் செய்து, மகசூல் இழப்பை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தண்டுக்கருகல் நோயில் இருந்து அவற்றை பாதுகாக்க, மண்ணில் போதியளவு ஈரப்பதம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்' எனவும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் கூறுகையில், 'வெயில் அதிகரித்து காணப்படுவதால், அதிகளவில் நீர் பருக வேண்டும். இளநீர், மோர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை உட்கொள்ள வேண்டும்.
அதிக வெயில் நிலவும் மதிய நேரங்களில், வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்வது நலம். வெயிலில் அலைந்து திரிந்து வந்தவுடன், 'ஏசி' போடுவது, குளிர்ந்த நீர் பருகுவதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.

