/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுமங்கலிகளுக்கு மங்கல பொருள் வழங்கிய சுவாமிகள்
/
சுமங்கலிகளுக்கு மங்கல பொருள் வழங்கிய சுவாமிகள்
ADDED : ஆக 02, 2025 12:14 AM

கோவை; ராம்நகர், கோதண்டராமர் கோவிலில் வீற்றிருந்து,ஸ்ரீ சக்ர மஹாமேரு பீடம் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மஹாஸ்வாமிகள், சாதுர் மாஸ்ய விரதம் மஹோத்ஸவம் மேற்கொண்டுள்ளார்.
அவரது ஜென்ம நட்சத்திர தின விழா மற்றும் ஆடி மூன்றாவது வெள்ளியான நேற்று, அம்பாளுக்கும் சந்திரமவுலீஸ்வரருக்குமான,சிறப்பு வழிபாடுகளை நிறைவு செய்த பின், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
அப்போது கோவிலுக்கு வருகை தந்த சுமங்கலி பெண்களுக்கு சேலை, ரவிக்கை, தேங்காய், பழம், வளையல் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, மங்கல பொருட்களை வழங்கினார்.
நுாற்றுக்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள், சுவாமிகளிடம் ஆசி பெற்று பெற்றுக்கொண்டனர். உலக ஷேமத்துக்குலோகமாதாவை வழிபட வேண்டும்; அதை சுமங்கலி பெண்கள் தவறாமல் பின்பற்ற வலியுறுத்தினார்.