/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறிச்சி குளத்தின் 'வால்' வாலாங்குளம் ஆனது
/
குறிச்சி குளத்தின் 'வால்' வாலாங்குளம் ஆனது
ADDED : டிச 11, 2025 06:43 AM
கொ ங் கு நாட்டில் குடியிருப்புகள் உருவாகத் தொடங்கிய காலத்தில், கரிகாலன் என்ற பட்டப் பெயர் கொண்ட கொங்குச் சோழ மன்னன், விரிவான நீர்ப்பாசனத் திட்டங்களை மேற்கொண்டார். பேரூரில் நொய்யல் ஆற்றங்கரையில் கருங்கற்களால் செய்யப்பட்ட படித்துறை, கரிகால் சோழன் துறை' என்று இன்றும் இருக்கிறது. அதனருகில், அரசமரம், நாகர், பிள்ளையார் சிற்பங்கள் மற்றும் புதையுண்ட சின்னங்களும் காணப்படுகின்றன.
நொய்யல் ஆற்றில், மழைக்காலங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை பயன்படுத்துவதற்காக, அக்காலத்தில் 16 அணைகள் கட்டப்பட்டன. அவற்றிலிருந்து பிரிந்த கால்வாய்கள் பல குளங்களை நிரப்பி, பாசனத்திற்கு உதவின.
பூளுவப்பட்டி அணையிலிருந்து, சித்திரசாவடி வாய்க்கால் வழியாக செலுவாம்பதி, கிருஷ்ணாம்பதி, குமாரசாமி ஏரி ஆகியவற்றுக்கு நீர் சென்றது. மூன்றுமே தற்போது கோவை வடக்கு தாசில்தார் வட்டத்தில் தெலுங்குபாளையம் வருவாய் கிராம எல்லைக்குள் உள்ளன.
பேரூரருகே உள்ள மற்றொரு அணையிலிருந்து பிரியும் கால்வாய்க்கு, இன்றைய பெயர் ராஜ வாய்க்கால்'. இது கொங்குச் சோழர் காலத்தில் ஆதிராஜன் வாய்க்கால்' என வழங்கப்பட்டது. இந்த நீர், பல தோப்புகளுக்கு சென்ற பின், பெரியகுளத்தை நிரப்பியது.
குறிச்சி குளம் நிரம்பிய பின், அதன் மீதி நீரானது வால்போல் வளைந்த நிலையில் இருந்த வாலாங்குளம்' எனப்பெயர் பெற்ற குளத்துக்குப் பாய்ந்தது. அதிலிருந்து புலியகுளம், அம்மன் குளம் போன்ற நீர்நிலைகளுக்கும், நீர் சென்றதாகக் கூறப்படுகிறது.

