/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நொய்யலை சீரமைத்து அழகுபடுத்த... ரூ.202.54 கோடி! மாநகராட்சிக்கு ஒதுக்கியது தமிழக அரசு
/
நொய்யலை சீரமைத்து அழகுபடுத்த... ரூ.202.54 கோடி! மாநகராட்சிக்கு ஒதுக்கியது தமிழக அரசு
நொய்யலை சீரமைத்து அழகுபடுத்த... ரூ.202.54 கோடி! மாநகராட்சிக்கு ஒதுக்கியது தமிழக அரசு
நொய்யலை சீரமைத்து அழகுபடுத்த... ரூ.202.54 கோடி! மாநகராட்சிக்கு ஒதுக்கியது தமிழக அரசு
ADDED : ஜன 29, 2026 05:08 AM

கோவை, நொய்யல் ஆற்றின் நீர் வழங்கு வாய்க்கால்களை துார்வாரி, கரையை பலப்படுத்த, மாநகராட்சிக்கு ரூ.202.54 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
கோவை நகரில் உள்ள 9 குளங்கள், நீர் வழங்கு வாய்க்கால்களை பராமரிக்கும் பொறுப்பை மாநகராட்சி வசம் பொதுப்பணித்துறை வழங்கியுள்ளது. மாநகராட்சி எல்லைக்குள் 18.56 கி.மீ. நீர் வழங்கு வாய்க்கால் இருக்கிறது. பல இடங்களில் கழிவு நீர் கலக்கிறது; குப்பை கொட்டப்படுகிறது. இரு கரையிலும் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன.
ஆற்றின் இருபுறமும் நகரமைப்பு பிரிவினர் கரையை அளந்து, எல்லை கற்கள் நட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றி, ஆற்றை மீட்டெடுக்கவும், இரு கரையிலும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டமைப்பு, பூங்கா ஏற்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டது. திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
திட்டங்களுக்கு நிதி பகிர்ந்தளிப்பதற்கான கமிட்டி கூட்டம், சமீபத்தில் சென்னையில் நடந்தது. அதில், ரூ.202.54 கோடி ஒதுக்கி, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டது. மானியமாக ரூ.62.47 கோடி, கடனாக ரூ.62.47 கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள நிதியை மாநகராட்சி செலவிட வேண்டும்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
ஆத்துப்பாலத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் வரை நொய்யல் க ரை, 4.30 கி.மீ. துாரத்துக்கு பலப்படுத்தி, 24 அடி அகலத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தப்படும். கல்லாமேடு, என்.பி.இட்டேரி, பட்டணம் ரோடு ஆகிய இடங்களில் நீரூந்து நிலையம் கட்டப்படும்.
முத்து காலனி, என்.பி.இட்டேரி, பெருமாள் கோயில் தெரு ஆகிய இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, ஆசாத் நகர், ராஜிவ்காந்தி நகர், வெள்ளலுார், போத்தனுாரில் பூங்கா உருவா க்கப்படும். சைக்கிள் பாதை, நடைபாதை ஏற்படுத்தப்படும். 4 இடங்களில் சைக்கிள் நிலையம் அமைக்கப்படும். நொய்யல் ஆற்றின் நுழைவு பகுதியில் வளைவு அமைக்கப்படும். படிக்கட்டு வடிவத்தில் கருங்கற்களில் தடுப்புச்சுவர், 11 மரங்கள், 50 கற்களில் இருக்கை வசதி ஏற்படுத்தப்படும்.
பார்வை மேடை அமைக்கப்படும். 307 சூரிய ஒளி மின் விளக்குகள் நிறுவப்படும். கரையில் 11.75 கி.மீ. துாரத்துக்கு வேலி அமைக்கப்படும். 55 குப்பை தொட்டிகள் வைக்கப்படும்.
இவ்வாறு, கமிஷனர் கூறினார்.

