/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகரை சுத்தம் செய்ய இலக்கு பத்து நாள்!; இரவிலும் பணிகள் 'விறுவிறு!'
/
நகரை சுத்தம் செய்ய இலக்கு பத்து நாள்!; இரவிலும் பணிகள் 'விறுவிறு!'
நகரை சுத்தம் செய்ய இலக்கு பத்து நாள்!; இரவிலும் பணிகள் 'விறுவிறு!'
நகரை சுத்தம் செய்ய இலக்கு பத்து நாள்!; இரவிலும் பணிகள் 'விறுவிறு!'
ADDED : ஜன 18, 2024 01:21 AM

கோவை : கோவையில், இரவு நேரங்களிலும் குப்பை சேகரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் தேங்கியுள்ள பழைய குப் பையை, 10 நாட்களுக்குள் அள்ள, 'டார்கெட்' நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
கோவை மாநகராட்சியில் உருவாகும் குப்பையை அகற்றும் பணி, தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. போதிய தொழிலாளர்கள், வாகனங்கள் இல்லாததால், குப்பை சேகரிப்பு பணி மேற்கொள்வதில், அந்நிறுவனம் சிரமத்தை சந்தித்தது. வீதிகளில் குப்பை தேக்கம் அதிகமானதால், சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்பட்டது.
மண்டல கூட்டங்கள் மற்றும் மாமன்ற கூட்டங்களில், கவுன்சிலர்கள் புலம்பித் தள்ளினர். அதிகாரிகளை சந்திக்கும் போதெல்லாம் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண அறிவுறுத்தினர்.ஆனால், குப்பையை தரம் பிரித்துக் கொடுத்தால் மட்டுமே சேகரிப்போம் என, மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் அடம் பிடித்து வருகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால், கோவை நகர் முழுவதும் குப்பை பிரச்னை தலைதுாக்கும்; தொற்றுநோய் பரவ ஆரம்பிக்கும். லோக்சபா தேர்தல் சமயத்தில் தேவையில்லாத பிரச்னையை உருவாக்க வேண்டாம் என, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இரவில் குப்பை அள்ளும் பணி துவக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாள் இரவில், 250 டன் குப்பை அள்ளி, கிடங்கிற்கு எடுத்துச் செல்ல, மாநகராட்சியில் ஊழியர்கள் மற்றும் வாகன வசதி இருக்கிறது.தற்போது, 160 டன் வரை அகற்றிச் செல்லப்படுகிறது. பொங்கல் பண்டிகை விடுப்பு முடிந்து, தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதும், பணிகளை வேகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இன்னும், 10 நாட்களுக்குள் வீதிகளில் தேங்கியுள்ள பழைய குப்பையை அகற்ற, 'டார்கெட்' நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதன்பின், அன்றைய தினம் உருவாகும் குப்பையை, அன்றிரவுக்குள் முழுமையாக அகற்றி முடிக்கவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.