/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
200 எக்டரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு
/
200 எக்டரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு
ADDED : ஜூலை 21, 2025 10:24 PM
சூலுார்; தோட்டக்கலைத்துறை சார்பில்,சூலுார் வட்டாரத்தில், 200 எக்டர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூலுார் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை உதவி இயக்குனர் ஷர்மிளா அறிக்கை:
நீர் சிக்கனத்தை ஊக்குவிக்கும் வகையில், நுண்ணீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் சூழலில், இருக்கும் நீரை விரயமில்லாமல் பயன்படுத்தும் வகையில் சொட்டு நீர் பாசனம் துணை புரியும்.
நடப்பாண்டு சூலுார் வட்டாரத்தில், 200 எக்டர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை சொட்டு நீர் பாசனம் அமைக்காத விவசாயிகள் புதிதாக அமைத்து கொள்ளலாம். ஏற்கனவே மானியம் பெற்று, சொட்டு நீர் பாசனம் அமைத்து, ஏழு ஆண்டுகள் முடிந்திருந்தால், மறுபடியும் மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள் அமைத்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விபரங்களை பெற, 0422 2990014 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப் பட்டுள்ளது.