/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
350 எக்டரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு
/
350 எக்டரில் சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு
ADDED : ஜூன் 25, 2025 10:33 PM
சூலுார்; சுல்தான்பேட்டை வட்டாரத்தில், 350 எக்டரில், சொட்டு நீர் பாசனம் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுல்தான்பேட்டை வட்டாரத்தில், 2025--26 ஆண்டிற்கு, சுல்தான்பேட்டை வட்டாரத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க, 350 எக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சொட்டு நீர் பாசனம் அமைப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் வாரப்பட்டி சமுதாய கூடத்தில் நடந்தது.வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷாலினி மற்றும் உதவி அலுவலர்கள் தியாகராஜன், சாய் கண்ணன் ஆகியோர் பங்கேற்று விளக்கம் அளித்தனர்.
அலுவலர்கள் பேசியதாவது: சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க, 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் அமைப்பதால், பயிர்களுக்கு தேவையான தண்ணீர் தடையின்றி கிடைக்கிறது. அதனால், தேவையான ஈரப்பதம் இருக்கும். பயிர்கள் நன்கு வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும்.
40 சதவீதம் வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது. உரங்களை சொட்டு நீர் வழியே தருவதால், வீணாவது தடுக்கப்படுகிறது. உரச்செலவும் குறைகிறது. பயிரின் நீர் தேவை அறிந்து சொட்டு நீர் பாசனம் செய்ய வேண்டும். அப்போது, நல்ல மகசூலுடன் அதிக லாபமும் ஈட்டலாம்.
இவ்வாறு, அலுவலர்கள் பேசினர்.