/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.6 கோடிக்கு மேல் கடன் வழங்கி எட்டியாச்சு இலக்கு
/
ரூ.6 கோடிக்கு மேல் கடன் வழங்கி எட்டியாச்சு இலக்கு
ADDED : ஏப் 05, 2025 11:26 PM
கோவை: ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடிக்குள் கடன் வழங்கி வந்த, 49 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், தற்போது இலக்கு எட்டப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 138 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவற்றில், விவசாயக் கடன், நகைக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மத்திய கால கடன் உள்ளிட்ட, பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன.
இதில், 2023 ஏப்., முதல் 2024 மார்ச் 31 வரை, 49 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடி அளவில் மட்டுமே கடன் வழங்கி வந்தன. மற்ற சங்கங்கள், ரூ.6 கோடிக்கு மேல் கடன் வழங்கி வருகின்றன.
குறிப்பிட்ட சங்கங்களில், கடன் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என்ற நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் பலனாக, 49 சங்கங்களும், 2024 ஏப்., முதல் 2025 மார்ச் 31 வரை, ரூ.6 கோடிக்கு மேல் கடன் வழங்கியுள்ளன.
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும், அதன் முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டு, 10 சதவீதம் கூடுதலாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, 49 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், கூடுதலாக கடன் வழங்க வேண்டி, அருகில் உள்ள கூட்டுறவு சங்கத்தினர், விற்பனையாளர்கள், அரசு அலுவலர்கள் என, 250 பேரை இப்பணியில் ஈடுபடுத்தி, சிறப்பு முகாம்கள் நடத்தி இலக்கு எட்டப்பட்டது,'' என்றார்.