/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் கோப்பையை தட்டிய குழு அணியினர்
/
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் கோப்பையை தட்டிய குழு அணியினர்
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் கோப்பையை தட்டிய குழு அணியினர்
ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் கோப்பையை தட்டிய குழு அணியினர்
ADDED : ஜூலை 08, 2025 12:25 AM

கோவை; கோவை மாவட்ட அளவிலான, ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி சரவணம்பட்டியில் நடந்தது.
இதில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட மாவட்ட, மாநில வீரர்கள், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' போட்டிகளுக்கு பிறகு நடந்த முதல் அரையிறுதியில்(குழு) ஸ்ரீதர், சங்கர், ஸ்ரீநிவி அணியினர், பரத், நவீன், பீஷ்மன் அணியை, 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.
இரண்டாவது அரையிறுதியில் ஸ்ரீனிவாசன், ரகு, செந்தில் அணியினர், ராஜகோபால், நீஷச்சித், விஜய் அணியினரை, 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். பரபரப்பான, இறுதிப் போட்டியில் ஸ்ரீதர், சங்கர், ஸ்ரீநிவி அணியானது, பரத், நவீன் மற்றும் பீஷ்மன் அணியினரை, 3-0 என்ற என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
அதேபோல், வீரர் ஸ்ரீதர், வீரர் ஸ்ரீனிவாசனை 11-8, 11-7 என்ற புள்ளி கணக்கிலும், வீரர் சங்கர், வீரர் செந்திலை, 11-8, 11-7 என்ற புள்ளி கணக்கிலும், வீரர் ஸ்ரீனிவி, வீரர் ரகுவை, 11-3, 11-2 என்ற புள்ளி கணக்கிலும் வீழ்த்தி, பரிசுகளை வென்றனர்.