/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீழே கிடந்த ரூ.ஒரு லட்சத்தை ஒப்படைத்த வாலிபர்
/
கீழே கிடந்த ரூ.ஒரு லட்சத்தை ஒப்படைத்த வாலிபர்
ADDED : மார் 20, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் கீழே கிடந்த, ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பாதுகாப்பாக கிழக்கு போலீசாரிடம் வாலிபர் ஒப்படைத்தார்.
பொள்ளாச்சி தேர்நிலையம் பகுதியில் நேற்றுமுன்தினம், 200 ரூபாய் நோட்டுகள் அடங்கிய பணக்கட்டு கீழே கிடந்தது. இதை அவ்வழியாக சென்ற மளிகை கடை ஊழியர் சூளேஸ்வரன்பட்டி அழகப்பா காலனியை சேர்ந்த தாமோதரன் பார்த்தார்.
அது யாருடைய பணம் என தெரியாததால், ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பாதுகாப்பாக மீட்டு, கிழக்கு போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார், அவரது செயலை பாராட்டினர். உரிய ஆவணங்களை காண்பித்து உரியவர் பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

