/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொப்பு வாய்க்காலுக்கு வந்த சோதனை! கற்களால் மூடி கபளீகரம் செய்ய முயற்சி
/
கொப்பு வாய்க்காலுக்கு வந்த சோதனை! கற்களால் மூடி கபளீகரம் செய்ய முயற்சி
கொப்பு வாய்க்காலுக்கு வந்த சோதனை! கற்களால் மூடி கபளீகரம் செய்ய முயற்சி
கொப்பு வாய்க்காலுக்கு வந்த சோதனை! கற்களால் மூடி கபளீகரம் செய்ய முயற்சி
ADDED : நவ 11, 2024 05:17 AM

கோவை : சிங்காநல்லுார் குளத்துக்கு சங்கனுார் வாய்க்காலில் இருந்து செல்லும் கொப்பு வாய்க்காலை கற்கள் கொண்டு மூடி, சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பாக அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.
கோவை மாநகராட்சி வசம், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குமாரசாமி குளம், குறிச்சி குளம் என, ஒன்பது குளங்கள் உள்ளன. மழை காலங்களில் இவற்றுக்கான நீர் வழித்தடங்களை ஒட்டிய குடியிருப்புகள், விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்குவது, தொடர்கதையாக உள்ளது.
மாநகராட்சி, 61வது வார்டு கள்ளிமடையை ஒட்டி சங்கனுார் வாய்க்கால் வழியாக சிங்காநல்லுார் குளத்துக்கு தண்ணீர் செல்கிறது. அங்குள்ள சுடுகாடு அருகே சங்கனுார் வாய்க்காலில் இருந்து பிரிந்து, 1 கி.மீ.,க்கு கொப்பு வாய்க்கால் செல்கிறது.
ஆக்கிரமிக்க முயற்சி
விவசாயிகளின் தொடர் போராட்டத்தை அடுத்து பிறகு இந்த வாய்க்காலை, 2015ம் ஆண்டு வருவாய் துறையினர் மீட்டனர். பின், பெயரளவுக்கு ஆழப்படுத்தி அறிவிப்பு பலகையும் வைத்து சென்றனர். ஆனால், தற்போது, கொப்பு வாய்க்காலில் கற்கள் கொட்டியும், குறுக்கே வழி அமைத்தும், ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகள் துணையோடு சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
கடந்த மாதம் பெய்த கனமழையால் சங்கனுார் வாய்க்காலை ஒட்டிய கதிரவன் கார்டன் பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. தொடர்ந்து, 15ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அங்கு ஆய்வு செய்து உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
ஆழப்படுத்தணும்!
இந்த கொப்பு வாய்க்காலை முறையாக ஆழப்படுத்தி, சிங்காநல்லுார் குளத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்தாலே, மழை காலங்களில் இதையொட்டிய குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவது தடுக்கப்படும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
அப்பகுதி மக்கள் கூறுகையில்,'கொப்பு வாய்க்காலை சிங்கை குளத்துடன் இணைத்து, தண்ணீர் கொண்டு சென்றாலே, மழைக்காலத்தில் பாதிப்புகள் வராது. அங்கு வைக்கப்பட்டிருந்த அரசு அறிப்பு பலகையும் எடுத்துவிட்டனர். தற்போது வாய்க்காலில் கற்களை கொட்டி வருகின்றனர். அதிகாரிகள் தடுத்து, தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.