/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விழிப்புணர்வு கூட்டம் நடத்திய அடுத்த 6 மணி நேரத்தில் திருட்டு
/
விழிப்புணர்வு கூட்டம் நடத்திய அடுத்த 6 மணி நேரத்தில் திருட்டு
விழிப்புணர்வு கூட்டம் நடத்திய அடுத்த 6 மணி நேரத்தில் திருட்டு
விழிப்புணர்வு கூட்டம் நடத்திய அடுத்த 6 மணி நேரத்தில் திருட்டு
ADDED : அக் 14, 2024 04:31 AM

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம்,துடியலுார் அருகே ஜி.என்.மில்ஸ் பிரிவு உருமாண்டம்பாளையத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்டில், கடந்த 6ம் தேதி துடியலுார் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில், அபார்ட்மென்டில் திருட்டு சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
போலீசார் இரவு, 8:00 மணிக்கு கூட்டம் நடத்திய நிலையில், அடுத்த 6 மணி நேரத்துக்கு பின்னர், 7ம் தேதி அதிகாலை, 2:15 மணி முதல், 2:40 மணிக்குள் முகமூடி கொள்ளையர்கள் மூன்று பேர், அதே அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தனர்.
அங்கு, ஆட்கள் இல்லாத பிளாட்டை அறிந்து, கதவை உடைத்து, கம்மல், நெக்லஸ், வளையல், செயின் என, 12 சவரனை திருடிச் சென்றனர். இச்சம்பவம், போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.