/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடனாக பெற்று வந்த ரூ.1 லட்சம் திருட்டு
/
கடனாக பெற்று வந்த ரூ.1 லட்சம் திருட்டு
ADDED : செப் 23, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் திருமலைசாமி, 65; இவர் நேற்று முன்தினம் கோவை நீலாம்பூரில் வசித்து வரும், தனது அண்ணன் மகள் அனுராதாவிடம், ரூ.1 லட்சம் கடனாக வாங்கினார். பணத்தை டவுசர் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, நீலாம்பூரில் இருந்து ஹோப் காலேஜ் பஸ் நிறுத்தத்திற்கு வந்தார்.
அங்கிருந்து திண்டுக்கல் செல்ல, தனியார் பஸ்சில் சிங்காநல்லுார் சென்று கொண்டிருந்தார். பஸ் மணிஸ் தியேட்டர் அருகே செல்லும் போது, நெரிசலை பயன்படுத்தி, மர்ம நபர் பிளேடால் அவரது பாக்கெட்டை கிழித்து, ரூ.1 லட்சத்தை திருடினர்.
திருமலைசாமி புகாரின் படி, சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

