/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகை பறித்த ஆசாமி குண்டர் சட்டத்தில் கைது
/
நகை பறித்த ஆசாமி குண்டர் சட்டத்தில் கைது
ADDED : ஆக 08, 2025 08:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை, சுகுணா புரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நிசாருதீன்,29; கடந்த ஜூன், 29 ல், சுந்தராபுரம், காந்திநகர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம், ஏழு சவரன் நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் சட்டத்தில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவிட்டார். அதன் பேரில், குண்டர் சட்டத்தில்கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்ட நிசாருதீனிடம் வழங்கப்பட்டது.

