கோவில்பாளையம்; கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கம் சார்பில், முப்பெரும் விழா கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லூரியில் நடந்தது.
சங்கத்தின் பொதுச்செயலாளர் கணேசன் வரவேற்றார். அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நளினி தலைமை வகித்து பேசினார். 'தமிழின் சிறப்பு' என்கிற தலைப்பில் தெய்வ சிகாமணி பேசினார்.
பூண்டி திருமுருகநாத சாமிகள் மடத்தின் நிறுவனர் சுந்தரராசன் அடிகள் பேசுகையில், வள்ளுவனின் வரிகளை வாசித்து வாழ்வை அமைத்துக் கொள்பவன் மாமனிதன் ஆகிறான். படிப்பே வாழ்க்கை பயணத்திற்கான ராஜபாட்டை. அதை பெறுவதில் இன்னல்கள் வந்தாலும் தகர்த்து முன்னேறுபவன் சாதனையாளன் ஆகிறான்,என்றார்.
திருப்பூர் நாகேஸ்வரன் எழுதிய தவத்திரு சுந்தரராசன் அடிகளார் என்னும் புத்தகம் வெளியிடப்பட்டது. பேச்சாளர் அரங்க கோபால் தலைமையில் பேச்சரங்கம் நடந்தது.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற நளினி, விவேகானந்தன், ஆனந்தகுமார், மதியழகன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.