நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: ராமலிங்க வள்ளலார், மகாத்மா காந்தி மற்றும் மகாகவி பாரதியார் ஆகியோரின் அவதார நாளை ஒட்டி, திருமூலர் வாழ்வியல் அறக்கட்டளை சார்பில், முப்பெரும் விழா சூலுார் அடுத்த பீடம்பள்ளியில் நடந்தது.
வள்ளலார், காந்தியடிகள், பாரதியார் குறித்த சிறப்பு சொற்பொழிவு, சமூக சேவகர்களை கவுரவித்தல், திருமந்திரம் ஒப்புவித்த மாணவர்களுக்கு பரிசளித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.
பேராசிரியர் ஈஸ்வரன், சி.ஆர்.ஆர்., மெட்ரிக் பள்ளி தாளாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பேசினார்கள்.
விழாவில், 31 சமூக சேவகர்களுக்கு விருதுகளும், திருமந்திரம் ஒப்புவித்த, 50 மாணவர்களுக்கு, பரிசுகள், சான்றுகள் வழங்கப்பட்டன.
ராதாகிருஷ்ணன், கல்யாணி, ஜெகதீசன், மகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்றனர்.