தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முப்பெரும் விழா

முப்பெரும் விழா

முப்பெரும் விழா


ADDED : அக் 14, 2026 12:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2026 12:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர்: இடையர் பாளையம் திருமூலர் வாழ்வியல் அறக்கட்டளை சார்பில், சமூக தொண்டர்கள், படைப்பாளிகளுக்கு விருது வழங்கல், அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு, கருத்து பரிமாற்றம் உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது. அறக்கட்டளை செயலாளர் பேராசிரியர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.

டாக்டர் முத்து சரவணக்குமார் சிறப்புரை யாற்றினார். அறக்கட்டளை சமூக தொண்டர்களுக்கும், தமிழ் படைப்பாளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தலைவர் பார்த்திபன், பொருளாளர் பெரிய அய்யாசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ரங்கசாமி, நாராயணசாமி, பேராசிரியை சாந்தா மணி, ஓய்வு பெற்ற துணை ராணுவ அதிகாரி கணியன் பாலன் ,சிவலிங்கம் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us