/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கேரம் போட்டியில் முதல் ஆறு இடம் பிடித்தவர்கள் தேசிய கேரம் போட்டிக்கு தகுதி
/
மாநில கேரம் போட்டியில் முதல் ஆறு இடம் பிடித்தவர்கள் தேசிய கேரம் போட்டிக்கு தகுதி
மாநில கேரம் போட்டியில் முதல் ஆறு இடம் பிடித்தவர்கள் தேசிய கேரம் போட்டிக்கு தகுதி
மாநில கேரம் போட்டியில் முதல் ஆறு இடம் பிடித்தவர்கள் தேசிய கேரம் போட்டிக்கு தகுதி
ADDED : டிச 31, 2024 06:23 AM

கோவை: கோவையில் நடந்த மாநில அளவிலான கேரம் போட்டியில், வெற்றி பெற்றவர்கள் சீனியர் பெடரேஷன் மற்றும் தேசிய கேரம் போட்டிக்கு, தகுதி பெற்றுள்ளனர்.
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்நாடு கேரம் சங்கம், கோவை மாவட்ட கேரம் சங்கம் சார்பில், மாநில அளவிலான கேரம் போட்டி மூன்று நாட்கள் நடந்தது. மாநிலம் முழுவதும், 520 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், அர்ஜூனா விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த மரியா இருதயம் கலந்து கொண்டார். மூத்தோர் ஆண்கள் பிரிவில், சென்னையை சேர்ந்த அப்துல் ஆசிப், மதுரை ஆரோக்கியராஜ் பிராங்கிளின், சென்னை சகாயபாரதி, திருப்பூர் கணேசன், கோவை கணேசன், சென்னை குபேந்திரபாபு ஆகியோர் முதல் ஆறு இடங்களை பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த கீர்த்தனா, டெனினா, நாமக்கல் பிரீத்தாபிரின்சி, மதுரை அபிநயா, சென்னை சோபியா, செம்மொழி எழில் ஆகியோர் முதல் ஆறு இடங்களை பிடித்தனர். முதியோர் ஆண்கள் பிரிவில், சென்னை பாலகோட்டையா முதலிடம் வென்றார்.
சென்னை நாகேஸ்வரராவ் இரண்டு மற்றும் துளசிங்கம் மூன்றாம் இடத்தை வென்றனர். முதியோர் பெண்கள் பிரிவில் சென்னை மகேஸ்வரி, ராவணம்மாள், திண்டுக்கல் தமிழரசி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
இரட்டையர் பிரிவில், சென்னையை முரளிகிருஷ்ணா மற்றும் ராஜன், சகாயபாரதி மற்றும் பாரதிதாசன், கோவை இளங்கோவன் மற்றும் நிசாமுதீன் அணியினர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
சீனியர் பிரிவில், முதல் நான்கு இடங்களை பிடித்தவர்கள் வரும் ஜன., 5 முதல், 8ம் தேதி வரை ஆந்திராவில் நடக்கும் சீனியர் பெடரேஷன் போட்டியிலும், மார்ச் மாதம் டில்லியில் நடைபெறும் தேசிய கேரம் போட்டியில் ஆண்கள், பெண்கள் மற்றும் சீனியர் பிரிவில் முதல் ஆறு இடங்களை பிடித்தவர்களும் ,தமிழக அணிக்காக விளையாடுகின்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், சான்றிதழ்கள், பரிசு கோப்பைகளை, இந்துஸ்தான் கல்லுாரி செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா ஆகியோர் வழங்கினர். கோவை மாவட்ட கேரம் சங்க செயலாளர் தங்ககுமார் உடனிருந்தார்.