/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்ட நெரிசலில் சிக்கியது டவுன் துவங்கி விட்டது தீபாவளி ‛'கவுன்ட் டவுன்'
/
கூட்ட நெரிசலில் சிக்கியது டவுன் துவங்கி விட்டது தீபாவளி ‛'கவுன்ட் டவுன்'
கூட்ட நெரிசலில் சிக்கியது டவுன் துவங்கி விட்டது தீபாவளி ‛'கவுன்ட் டவுன்'
கூட்ட நெரிசலில் சிக்கியது டவுன் துவங்கி விட்டது தீபாவளி ‛'கவுன்ட் டவுன்'
ADDED : அக் 13, 2025 01:18 AM

கோவை:ராஜவீதியில் பெற்றோரை தவற விட்ட குழந்தை அழுது கொண்டிருந்தது. இதை கண்ட நபர் ஒருவர், அங்கிருந்த காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, குழந்தையை அழைத்து வந்து, போக்குவரத்து காவலர்களிடம் ஒப்படைத்தார்.
அவர்கள், குழந்தையின் பெயர் மற்றும் பெற்றோரின் பெயரை, மைக்கில் அறிவித்து, காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அவ்வளவு கூட்டம் நகரில். அவ்வப்போது, போலீசார், மைக்கில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகளை, பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.
விடுமுறை நாளான நேற்று, டவுன்ஹால், காந்திபுரம், கிராஸ்கட் உட்பட பல பகுதிகளில், தீபாவளிக்கு புத்தாடைகள் எடுக்க வந்தவர்களின் கூட்டம் அலைமோதியது.
100 மீ., கடக்கவே, படாத பாடு பட வேண்டியிருந்தது. புத்தாடைகள் எடுக்கும் போது, மரக்கன்றுகள், 3,000ம் ரூபாய்க்கு மேல் ஆடை ரகங்களை எடுத்தால், ஸ்லோகன் கான்டஸ்ட்', 2,000ம் ரூபாய்க்கு மேல் எடுத்தால் சிறப்பு கூப்பன் என, அட்டகாசமாக அறிவிப்புகளால், துணிக்கடைகளில் கூட்டம் நிரம்பியது.
நினைத்து சென்ற பிடித்த ஆடைகள், நீண்ட நேரம் கழித்து கண்ணில் தென்பட்ட பலருக்கு மகிழ்ச்சி. பெரிய, பெரிய கடைகளில் மட்டும் தான் என்றில்லை... சின்ன, சின்ன கடைகளிலும் கூட்டம் கணிசமாகவே இருந்தது. சாலையோரத்தில், துணிகள், காலணிகள் என வைத்தவர்களிடமும் பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தார்கள் பலர்.
போன வாரமே போய்ட்டு வந்துருலாம்னு சொன்னேன். யாருமே கேட்கல. இப்ப பாருங்க; கூட்டத்துல சிக்கி அவதிப்பட வேண்டியிருக்கு' என்று, ஒரு குடும்பஸ்தர் புலம்பியதையும் கேட்க முடிந்தது.
நகரில் திரண்ட கூட்டத்தால், துணிக்கடைகள், காலணி கடைகள், சிறு கடைகள், ஓட்டல்கள், இனிப்பு கடைகள், பொம்மைக் கடைகள் என, எல்லாவற்றிலும் திருப்தியான வியாபாரம் இருந்தது. வரும் சில நாட்களில், கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.