/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று மோட்டார் வாகன வடிவமைப்பு போட்டி
/
இன்று மோட்டார் வாகன வடிவமைப்பு போட்டி
ADDED : அக் 13, 2025 01:18 AM

கோவை;குமரகுரு கல்வி நிறுவனங்களின் சார்பில், 10வது தேசிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் வடிவமைப்பு போட்டி, இன்று துவங்குகிறது.
சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியும், ஐதராபாத்தை சேர்ந்த பிரட்டர்னிட்டி ஆப் மெக்கானிக்கல் அன்ட் ஆட்டோமோட்டிவ் இன்ஜினியர்ஸ் அமைப்பும் இணைந்து, போட்டியை நடத்துகின்றன.
பந்தய மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி, சோதனை அடிப்படையில் அனுப்பும் இந்த போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவர் குழுவினர் பங்கேற்றனர். 1300 இளம் இன்ஜினியர்கள் பங்கேற்றனர். இவர்கள் வடிவமைத்த வாகனங்களை, இரண்டு தினங்களாக தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவினர் பரிசோதித்தனர். மாணவர்கள் உருவாக்கிய கார்ட் ரக கார்கள், பைக்குகள் தேர்வில் இடம் பெற்றன.
தெலுங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி செயல் தலைவர் ராமராவ், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியின் தாளாளர் சங்கர் வாணவராயர், கோவையில் நடக்கும் தேசிய மாணவர் மோட்டார்ஸ்போர்ட் வடிவமைப்பு போட்டியின் 10வது பதிப்பைத் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
இவற்றின் செயல்பாடுகள், திறன்கள் போன்றவை, நேரடி செயல் விளக்கத்தில் இடம் பெற உள்ளன. இன்று முதல் வரும் 15 வரை, செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் ரேஸ் டிராக்கில் இவை சோதனை ஓட்டத்தை நடத்துகின்றன.