/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாய்க்காலுக்குள் டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி
/
வாய்க்காலுக்குள் டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி
ADDED : அக் 08, 2024 11:56 PM

சூலுார் : சுல்தான்பேட்டை அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஒருவர் பலியானார். இருவர் மீட்கப்பட்டனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பல்லடம் மந்திரிபாளையத்தை சேர்ந்த குப்பன்,50. டிரைவர். இவர், டிராக்டரில், அதே ஊரை சேர்ந்த வீரன், 35, எஸ் அய்யம்பாளையத்தை சேர்ந்த மணி, 35, கேத்தனுாரை சேர்ந்த தங்கவேல்,40, ஆகியோருடன், நேற்று மதியம் செஞ்சேரிமலை அருகே உள்ள மந்திராசலம் என்பவர் தோட்டத்துக்கு சென்றனர்.
அங்கு, மாட்டு சாணம் ஏற்றிகொண்டு, பி.ஏ.பி., வாய்க்கால் ரோட்டில் டிராக்டரில் சென்றனர்.
அப்போது, அங்குள்ள வளைவில் திருப்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது. இதில், தங்கவேல் டிராக்டரில் இருந்து குதிக்கும் போது, இடுப்பில் அடிபட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குப்பன், வீரன் ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர். மணி என்பவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் டிராக்டரை மீட்டனர். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மணியை தேடி வருகின்றனன்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

