ADDED : அக் 29, 2024 11:49 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், விளை பொருட்களுக்கு, அக்மார்க் சான்றிதழ் பெறுவது மற்றும் பகுப்பாய்வு செய்வது குறித்து விவசாயிகளுக்கு, தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பயிற்சி வகுப்பு நடந்தது.
வேளாண்துறை இயக்குனர் (வேளாண் வணிகம்) மீனாம்பிகை தலைமை வகித்தார். வேளாண் விளைபொருட்களின் பகுப்பாய்வு மூலம் சந்தைப்படுத்தி, அதிக லாபம் பெறும் வாய்ப்பினை பயன்படுத்துவது, அக்மார்க் சான்றிதழ் பெறுவது, முத்திரை சீட்டின் முக்கியத்துவம் தரம் பிரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
