/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரத்தை அகற்றி வேறு இடத்தில் நடவு செய்யணும்
/
மரத்தை அகற்றி வேறு இடத்தில் நடவு செய்யணும்
ADDED : ஜன 02, 2026 05:08 AM

கோவை: அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் ரவுண்டானாவை கடந்து வரும் வாகன ஓட்டிகள், லட்சுமி மில்ஸ் சந்திப்பை கடந்து வருவோர், ஒசூர் ரோட்டில் இருந்து வருவோர் எல்.ஐ.சி. சந்திப்பில் நின்று செல்லும் வகையில், சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
உப்பிலிபாளையத்தில் இருந்து வருவோர், சிக்னலில் காத்திருக்காமல் இடது புறம் திரும்பி, ஏ.டி.டி. காலனிக்குச் செல்லலாம். திரும்பும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறையின் அறிவிப்பு பலகை, பெரிய மரம் இருக்கிறது. வாகன ஓட்டிகளின் வசதிக்காக வ.உ.சி. மைதானத்தின் சுற்றுச்சுவர் சிறிதளவு இடிக்கப்பட்டிருக்கிறது.
வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்யும் வகையில், அவ்விடத்தில் மஞ்சள், கருப்பு பலகை நடப்பட்டிருக்கிறது. மரத்திலும் கருப்பு, வெள்ளை பெயின்ட் பூசப்பட்டிருக்கிறது.
இருந்தாலும், உப்பிலிபாளையத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இடதுபுறம் திரும்ப சிரமப்படுகின்றனர். அதேபோல், லட்சுமி மில்ஸ் பகுதியில் இருந்து வருவோர் திரும்பும்போதும், நடைபாதையில் மோதக் கூடிய அபாயம் இருக்கிறது.
எனவே, வருவாய்த்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தாக இருக்கக் கூடிய அம்மரத்தை வேரோடு பெயர்த்தெடுத்து, வேறொரு இடத்தில் நடவு செய்ய வேண்டும். பின், சாலையை அகலப்படுத்த வேண்டும்.
தேவையற்ற போக்குவரத்து நெருக்கடி ஏற்படாது. போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

