ADDED : மார் 20, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, காரச்சேரி பகுதியில் உரிய ஆவணம் இன்றி, கிராவல் மண் லோடு ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு, காரச்சேரி பகுதியில், கேரள பதிவு எண் கொண்ட டிப்பர் லாரி, உரிய ஆவணம் இன்றி கிராவல் மண் எடுத்து வந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட, கனிம வள உதவி புவியியளாளர் சந்தியா அந்தோணி மேரி, 33, லாரியை சோதனை செய்தார்.
உரிய ஆவணம் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. லாரி டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். ரோட்டோரத்தில் நின்ற லாரி, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

