/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாய் பிளந்து காத்திருக்கிறது பாதாள சாக்கடை! எல்.ஜி., பள்ளி அருகே சிலாப் உடைந்து ஆபத்து
/
வாய் பிளந்து காத்திருக்கிறது பாதாள சாக்கடை! எல்.ஜி., பள்ளி அருகே சிலாப் உடைந்து ஆபத்து
வாய் பிளந்து காத்திருக்கிறது பாதாள சாக்கடை! எல்.ஜி., பள்ளி அருகே சிலாப் உடைந்து ஆபத்து
வாய் பிளந்து காத்திருக்கிறது பாதாள சாக்கடை! எல்.ஜி., பள்ளி அருகே சிலாப் உடைந்து ஆபத்து
ADDED : மார் 19, 2024 12:21 AM

தார் போட்டு குழியை மூடுங்க!
பாலக்காடு ரோடு, எட்டிமடை ரவுண்டானா அருகே, சூர்யா சூப்பர் மார்க்கெட் எதிர்ப்புறம், சாலை திருப்பத்தில் தார் சாலை இடிந்து, பாதி சாலை வரை குழியாக இருந்தது. புகார் செய்தபின், அதிகாரிகள்மண் கொண்டு குழியை நிரப்பியுள்ளனர். நிரந்தர தீர்வாக, தார் கொண்டு குழியை மூட வேண்டும்.
- கார்த்திக், க.க.சாவடி.
மின் விபத்து அபாயம்
சிங்காநல்லுார், திருச்சி ரோடு, சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை முன் சாலையில் பெரிய குழி உள்ளது. இதில், இ.பி., கேபிளும் வெளியே நீட்டிக்கொண்டுள்ளது. வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் கேபிள் சேதமடைந்து வருகிறது. மின் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
- ஆறுமுகம், சிங்காநல்லுார்.
உடைந்த சிலேப்
வெள்ளலுார், கக்கன் நகர், எல்.ஜி., பள்ளி அருகே, பாதாள சாக்கடை சிலாப் உடைந்து குழியாக உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் குழியில் தவறி விழுவதற்கு வாய்ப்புள்ளது. உடைந்த சிலாப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
- புவனா, வெள்ளலுார்.
சிதறும் குப்பை
ஆவாரம்பாளையம், முருகன் கோவில் வீதியில் குப்பை சேகரிக்க வரும் வண்டிகளில், தொட்டிகள் உடைந்த நிலையில் உள்ளது. இதனால், குப்பையை சரிவர சேகரிக்க முடியவில்லை. வண்டிகளில் எடுத்து செல்லும் குப்பை, மீண்டும் கீழே விழுகிறது.
- பெருமாள்சாமி, ஆவாரம்பாளையம்.
ஆமை வேக பணி
தடாகம் ரோடு, பால் கம்பெனி பேருந்து நிலையம் அருகே புதிய பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. பழமையான மரத்தை சுற்றிலும் தோண்டியுள்ளதால், மரம் விழுவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெறும் பணியால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
- ஸ்ரீநிவாசன், பால்கம்பெனி.
வாகனஓட்டிகள் சிரமம்
தண்ணீர் பந்தல் முதல் பீளமேடு வரையுள்ள, சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். குறுகலான சலையில், ஆபத்தான சூழலில், பாதசாரிகள் நடந்து செல்கின்றனர்.
- பழனிசாமி, தண்ணீர்பந்தல்.
குடிநீர் குழாயருகே சாக்கடை
ஒண்டிப்புதுார், காமாட்சிபுரம், ராமதேவர் வீதியில், சாக்கடையை துார்வாரி, கழிவுகளை சாலையிலேயே போட்டுள்ளனர். குறிப்பாக, கழிவுகளை குடிநீர் குழாய் அருகிலேயே குவிக்கின்றனர்.
- தங்கவேல், ஒண்டிப்புதுார்.
தார் போட மறந்தாச்சு
சேரன்மாநகர், விளாங்குறிச்சி, 22வது வார்டில், புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இதில், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தார் சாலை அமைக்காமல் விட்டுள்ளனர். ஜல்லிக்கற்களாக இருக்கும் சாலையில் நடக்கவும், வாகனங்களை இயக்கவும் சிரமமாக உள்ளது.
- ஜெயராமன், சேரன்மாநகர்.
குழியில் மாட்டும் வாகனங்கள்
வடவள்ளி, பஞ்சாப் நேஷனல் வங்கி அருகே, சாலையோரம் சிலாப் உடைந்துள்ளது. குழியாக இருப்பதால், கார் போன்ற வாகனங்களின் சக்கரம் மாட்டிக்கொள்கிறது. முதியவர்கள் தடுக்கி விழுகின்றனர்.
- ஜெகன், வடவள்ளி.
இருளால் பாதுகாப்பற்ற சூழல்
கோவை மாநகராட்சி, 57வது வார்டு, எஸ்.எம்.எஸ்.,லே-அவுட்டில், கம்பம் 31ல், கடந்த ஒரு வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் வெளியில் செல்ல பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
- ஜனனி, ஒண்டிப்புதுார்.

