தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொங்கியது பாதாள சாக்கடை குழாய்!

பொங்கியது பாதாள சாக்கடை குழாய்!

பொங்கியது பாதாள சாக்கடை குழாய்!


ADDED : ஜன 16, 2024 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2024 11:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை;கோவை, ராம்நகர் அருகே பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் பொத்துக் கொண்டு, ராமர் கோவில் வீதியில் ஆறு போல் ஓடியது. துர்நாற்றம் வீசியதால், பொதுமக்கள் மூக்கை பொத்திக் கொண்டு, அவ்வழியை கடந்து சென்றனர்.

கோவை நகரில், பழைய மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், அழுத்தம் தாங்காமல், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுவது வாடிக்கையாகி விட்டது.

நேற்று காலை, ராம்நகர் காளிங்கராயன் வீதியில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வழிந்தோடியது.

ராமர் கோவில் முன் தேங்கி, அவ்வீதியில் ஆறு போல் வழிந்தோடியது. துர்நாற்றம் வீசியதால், அப்பகுதியை கடந்து சென்றவர்கள், மிகவும் அவதிப்பட்டனர்.

மாநகராட்சி அலுவலர்கள் விரைந்து வந்து, பாதாள சாக்கடை மேனுவலை திறந்து, அடைப்பை நீக்கியதும், கழிவு நீர் தடையின்றி சென்றது.

காந்திபுரம் சுற்றுப்பகுதியில் ஓட்டல்கள், லாட்ஜ்கள், மெஸ்கள், வர்த்தக நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

இவற்றில் இருந்து கழிவு நீர் அதிகமாக வெளியேறுவதால், ஏதேனும் ஒரு வீதியில் அடைப்பு ஏற்பட்டால், மேனுவல் வழியாக கசிவு ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காண, பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும், ரோபோ இயந்திரங்களை பழுது நீக்கி, விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் ஆய்வு செய்து, அடைப்பு ஏற்படாத வகையில் சுத்தம் செய்யும் பணியை, தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us