/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிழற்கூரை மேல்பகுதி சேதம்; காத்திருக்கும் பயணியர் அவதி
/
நிழற்கூரை மேல்பகுதி சேதம்; காத்திருக்கும் பயணியர் அவதி
நிழற்கூரை மேல்பகுதி சேதம்; காத்திருக்கும் பயணியர் அவதி
நிழற்கூரை மேல்பகுதி சேதம்; காத்திருக்கும் பயணியர் அவதி
ADDED : ஆக 04, 2025 08:01 PM

நெகமம்; நெகமம், சேரிபாளையம் பயணியர் நிழற்கூரை மேல் பகுதி சேதம் அடைந்திருப்பதால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நெகமம், சேரிபாளையத்தில் உள்ள பயணியர் நிழற்கூரையில் ஏராளமானோர் நின்று பஸ் பயணம் மேற்கொள்கின்றனர். இதில், இந்த நிழற்கூரையின் மேல் பகுதியில், கான்கிரீட் பூச்சுகள் சேதம் அடைந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இதனால் இங்கு பயணியர் மற்றும் அப்பகுதி மக்கள் அமர்வதை தவிர்த்து வருகின்றனர். இத்துடன் இந்த நிழற்கூரையின் மேல் பகுதி, எப்போது வேண்டுமானாலும் கீழே இடிந்து விழும் நிலையில் இருப்பதால், இதை ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
இதை இடித்து புதிதாக மீண்டும் நிழற்கூரை அமைக்க, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.