/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊர்ப்புற நுாலகத்தில் அடிப்படை வசதியில்லை
/
ஊர்ப்புற நுாலகத்தில் அடிப்படை வசதியில்லை
ADDED : ஜூலை 11, 2025 11:33 PM
வால்பாறை, ; நுாலகத்துறை சார்பில், வால்பாறை நகர், காடம்பாறை ஆகிய இடங்களில் கிளை நுாலகமும், அட்டகட்டி பகுதியில் பகுதி நேர நுாலகமும், சோலையாறு நகர் பகுதியில் ஊர்ப்புற நுாலகமும் செயல்படுகிறது.
இந்நிலையில், சோலையாறு நகரிலுள்ள ஊர்ப்புற நுாலகத்தில் போதிய நுால்கள் இருந்தாலும், வாசகர்கள் அமர்ந்து படிக்க இருக்கை வசதி இல்லை. இதனால் வாசகர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
வாசகர்கள் கூறுகையில், 'சோலையாறு நகர் சுற்றுப்பகுதி மாணவர்கள் நுாலகத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால், நுாலக கட்டடம் மழைக்கு ஒழுகுவதால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சம் உள்ளது. வாசகர்கள் அமர்ந்து படிக்க இருக்கைகள் இல்லை. இதனால் நுாலகத்தை பயன்படுத்த வாசகர்கள் தயக்கம் காட்டுகின்றனர். வாசகர்கள் நலன் கருதி வேறு கட்டடத்துக்கு நுாலகத்தை மாற்றி, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்' என்றனர்.