/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்தது
/
கனமழைக்கு சுவர் இடிந்து விழுந்தது
ADDED : அக் 23, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் இரண்டு மணி நேரம், கன மழை பெய்ததையடுத்து, சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இரவு, 7:00 மணிக்கு பலத்த இடியுடன், மழை பெய்ய தொடங்கியது. 9:00 மணி வரை கனமழை விடாமல் பெய்தது. நகரில் உள்ள சாலைகளில், வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
காரமடை சாலையில், சி.டி.சி., டெப்போ எதிரே, வேர் ஹவுஸ் குடோன் உள்ளது. கனமழைக்கு குடோன் காம்பவுண்ட் சுவர் இடிந்து, காலி இடத்தில் விழுந்தது. இதனால் வீடுகள் சேதமோ, உயிர் சேதமோ ஏதும் ஏற்படவில்லை.