ADDED : ஏப் 08, 2026 07:49 PM

அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் சுற்றுச்சுவரில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கோவையில் சமீபகாலமாக, கொலை, கொள்ளை, சைபர் மோசடி, போக்சோ பாலியல் தொல்லை போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் சுற்றுச்சுவர் முழுவதும், 'கோவை டிஜி காப்', பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்தால் போக்சோ சட்டத்தில் கைது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
