sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 சேமிப்புக் கிடங்கு கொள்கையால்.. வழி பிறக்கும்! . தொழில் வளர்ச்சி சாத்தியம் ஆகும்

/

 சேமிப்புக் கிடங்கு கொள்கையால்.. வழி பிறக்கும்! . தொழில் வளர்ச்சி சாத்தியம் ஆகும்

 சேமிப்புக் கிடங்கு கொள்கையால்.. வழி பிறக்கும்! . தொழில் வளர்ச்சி சாத்தியம் ஆகும்

 சேமிப்புக் கிடங்கு கொள்கையால்.. வழி பிறக்கும்! . தொழில் வளர்ச்சி சாத்தியம் ஆகும்


ADDED : ஜன 15, 2026 05:10 AM

Google News

ADDED : ஜன 15, 2026 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : 'தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு கொள்கை -2026' கோவையின் வேகமான தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என, தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கோவை போன்ற உற்பத்தி சார் தொழில் துறை நகரங்களுக்கு, சரக்குப் போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கிடங்கு கட்டமைப்புகள் பெரிய அளவில் தேவை.

தொழில்முனைவுத் திறன் சிறப்பாக இருந்தாலும், உற்பத்திச் செலவைக் குறைப்பதில் சரக்குப் போக்குவரத்து மற்றும் சேமிப்புக் கிடங்கு செலவுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், சூலூர், கரவளி மாதப்பூரில் 'மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க்' எனப்படும் பல்லடுக்கு சரக்குப் போக்குவரத்து முனையம் அமைகிறது. இந்நிலையில், மாநில அரசு சேமிப்புக் கிடங்கு கொள்கை, கோவையின் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

2ம், 3ம் நிலை நகரங்களில் அமையும் சேமிப்புக் கிடங்குகளுக்கு 25 சதவீத மூலதன மானியம் ரூ.2 கோடி வரை அளிக்கப்படுகிறது.

நில விலையில் 50 சதவீத மானியம் என்ற அறிவிப்பு, நில மதிப்பு அதிகமாக இருக்கும் கோவை போன்ற நகரங்களுக்கு, பெரிய நிவாரணமாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை முயற்சிகளுக்கு (கிரீன் இனிஷியேடிவ்) 25 சதவீத மானியம் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.

இதுதொடர்பாக, கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:

தமிழக அரசின் சேமிப்புக் கிடங்கு கொள்கை வரவேற்கத்தக்க ஒன்று. ஒருங்கிணைந்த கிடங்கு கட்டமைப்பு, பழைய கிடங்குகளை விரிவுபடுத்துதல், பொது தனியார் பங்களிப்பு, நவீன தொழில்நுட்ப கிடங்குகள், குறிப்பிட்ட பொருள்களுக்கேற்ற பிரத்யேக கிடங்குகள் என, பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவை திட்டமிட்டபடி செயலுக்கு வரும்பட்சத்தில், அது தொழில்துறையின் வேகமான வளர்ச்சிக்கு உதவும். புதிய சேமிப்புக் கிடங்கு பணியாளர்களுக்கு பயிற்சி மானியம் என்ற அறிவிப்பு, வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும்.

அதேசமயம், சேமிப்புக்கிடங்கில் குறைந்தபட்ச முதலீடு ரூ.20 கோடி என்பதை, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கேற்ப தளர்வு செய்தால் உதவியாக இருக்கும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us