/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோலையாறு அணையின் நீர்மட்டம் 146 அடியானது!
/
சோலையாறு அணையின் நீர்மட்டம் 146 அடியானது!
ADDED : ஜூன் 24, 2025 10:08 PM

வால்பாறை; வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில் துவங்கிய தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்கிறது. கடந்த சில நாட்களாக மழை தீவிரமாக பெய்யும் நிலையில், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருவதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
சோலையாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பி.ஏ.பி., பாசன திட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மொத்தம், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 146.33 அடியாக உயர்ந்தது.
அணைக்கு வினாடிக்கு, 2,466 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு, 530 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடபட்டுள்ளது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,) வருமாறு: சோலையாறு - 27, பரம்பிக்குளம் - 5, வால்பாறை - 17, மேல்நீராறு - 31, கீழ்நீராறு - 21, மணக்கடவு - 10, பொள்ளாச்சி - 5 என்ற அளவில் மழை பெய்தது.