ADDED : நவ 14, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை ; கோவை மாவட்டத்தில் வரும் 19ம் தேதி வரை சாரல் மழை பெய்யக்கூடும் என, கோவை, வேளாண் பல்கலை, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் 32 டிகிரி செல்சியஸாக இருந்த அதிகபட்ச வெப்பநிலை, அடுத்த 5 நாட்களுக்கு 28 டிகிரியாக இருக்கும். சராசரியாக குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாவட்டம் முழுதும் சராசரியாக 22 மி.மீ., மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, வரும் 19ம் தேதி வரை 4 முதல் 6 மி.மீ., வரை மழை பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றில் அதிகபட்சம் 90 சதவீதமும், குறைந்தபட்சம் 50 சதவீத ஈரப்பதமும் இருக்கும். காற்றின் வேகம் அதிகபட்சம் மணிக்கு 10 கி.மீ., ஆக இருக்கும் என, வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.