ADDED : மே 04, 2025 12:45 AM

அ நிறம் | அளவு
கோவை: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, ஆர்.ஆர்.துர்யா குடியிருப்பு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், தொழிலாளர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
குடியிருப்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, நலவாரிய உறுப்பினர் சேர்க்கையும் மேற்கொள்ளப்பட்டது.
சங்கத்தின் செயலாளர் நவநீதன் கூறுகையில், ''அனைவரும் சமம் என்ற அடிப்படையில், இந்த சமபந்தி விருந்து நடத்தப்பட்டது. விருந்தில், 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில், நலவாரிய பதிவும் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம், 16 பேர் பதிவு செய்தனர். மற்றவர்களுக்கு வரும் புதன்கிழமை பதிவு மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.
நிகழ்ச்சியில், ராமநாதபுரம், தொழிலாளர் நலத்துறை கண்காணிப்பாளர் மாலினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
