/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீழே கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த பெண்
/
கீழே கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த பெண்
கீழே கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த பெண்
கீழே கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த பெண்
ADDED : செப் 23, 2024 11:23 PM

கோவை : கீழே கிடைத்த ரூ.50 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த பெண்ணை, போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
கோவை சித்தாபுதுார் பாலாஜி நகரை சேர்ந்தவர் நிர்மலா, 41; இவர் நேற்று முன்தினம், தனது தாயார் சாரதாவுடன், பாலசுந்தரம் ரோட்டில் நடைபயிற்சி சென்றார்.
அப்போது அங்கு, 50 ஆயிரம் ரூபாய் பணக்கட்டு கீழே கிடந்ததை பார்த்தார். உடனே நிர்மலா அந்த பணத்தை எடுத்து வைத்து, யாராவது பணத்தை தேடி வருகிறார்களா என சிறிது நேரம் பார்த்தார். யாரும் வராததால், நிர்மலா அந்த பணத்தை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜூனிடம் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜூன், நிர்மலாவின் செயலை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் தெரிவித்தார்.
அவர், நிர்மலாவை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.