/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேட்டதும் கிடைத்தது வீடு வேண்டாம் என்றார் பெண்
/
கேட்டதும் கிடைத்தது வீடு வேண்டாம் என்றார் பெண்
ADDED : மே 26, 2025 11:55 PM

கோவை : மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் விஜயலட்சுமிக்கு, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி உள்ளிட்ட, மூன்று குழந்தைகள் உள்ளனர். ஒரு குழந்தை தவிர, மற்ற இரு குழந்தைகளும் பள்ளிப்படிப்பை தொடர்கின்றனர்.
கணவர் கூலி வேலை செய்து வருகிறார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அருகே, கூரை வேய்ந்த தற்காலிக வீட்டில் வசிக்கிறார். மழைகாலத்தில் குடியிருக்க முடியாது; வெய்யில் காலத்தில் அனல் தகிக்கும் என்பதால், வீடு ஒதுக்கித்தருமாறு மாவட்ட வருவாய் அலுவலரிடம் விஜயலட்சுமி மனு கொடுத்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம், மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதிகாரிகள் மனு மீது விசாரணை மேற்கொண்டு, கோவைபுதுார் குளத்துப்பாளையத்தில் வீடு தயார் நிலையில் இருப்பதாகவும், அங்கு ஒதுக்கி கொடுக்கலாமா என்றும் கேட்டனர்.
அதற்கு அப்பெண், தான் பிறந்து வளர்ந்த மேட்டுப்பாளையத்தில்தான் வீடு வேண்டும் என்றார். அதிகாரிகள் ஆவண செய்வதாக உறுதியளித்தனர்.