/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணை கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை
/
பெண்ணை கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை
ADDED : ஜன 12, 2024 10:28 PM
சூலுார்;சூலுார் அடுத்த சிந்தாமணிபுதூரை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். சவுதி அரேபியாவில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி, 43.
கடந்த ஆறு மாதத்துக்கு முன், வீட்டின் மேல்தளத்தில் வீடு கட்டும் பணி செய்துள்ளார். இறுதி கட்ட பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகையை சேர்ந்த யாசின் மகன் பாபு, 22 என்ற தொழிலாளி கடந்த சில நாட்களாக செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம், வீட்டில் விஜயலட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். 2:00 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த பாபு, கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி, விஜயலட்சுமியின் வாயை டேப்பால் ஒட்டி, கை, கால்களை கட்டி போட்டுள்ளார்.
விஜயலட்சுமி அணிந்திருந்த ஒன்பது சவரன் தாலி செயின், 4 சவரன் வளையல்கள், செல்போனை பறித்துக்கொண்டு, பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம், ஏ.டி.எம்., கார்டு ஆகியவற்றை திருடிக்கொண்டு பைக்கில் தப்பி சென்றார். தகவலறிந்த சூலுார் போலீசார், தனிப்படை அமைத்து, குற்றவாளியை தேடி வருகின்றனர்.