/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோமாரி தடுப்பூசி போடும் பணி துவங்கியது
/
கோமாரி தடுப்பூசி போடும் பணி துவங்கியது
ADDED : ஜூலை 06, 2025 11:37 PM
பெ.நா.பாளையம்; கோவை புறநகர் பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி பணி தொடங்கியது.
இது குறித்து, கால்நடை துறையினர் கூறுகையில், 'கோமாரி நோய் கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நோய் காரணமாக கால்நடைகள் இறப்பு குறைவாக இருந்தாலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலை திறன் குறைவு, கறவை மாடுகளின் சினை பிடிப்பு தடைபடுகிறது.
இளம் கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இந்த நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இது நோய் பாதித்துள்ள மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் போன்றவையால் மற்ற கால்நடைகளுக்கு எளிதாக பரவுகிறது. கோமாரி நோய் பரவலை தடுக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவை நகர், புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. தடுப்பூசி போடும் பணியில், 115 குழுவினர் ஈடுபடுகின்றனர். சிறப்பு முகாம், 21 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றனர்.