/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டு எண்ணும் மையம் தயார்படுத்த பணிகள் 'விறுவிறு':துணை கமிஷனர் தலைமையில் 'டீம்'
/
ஓட்டு எண்ணும் மையம் தயார்படுத்த பணிகள் 'விறுவிறு':துணை கமிஷனர் தலைமையில் 'டீம்'
ஓட்டு எண்ணும் மையம் தயார்படுத்த பணிகள் 'விறுவிறு':துணை கமிஷனர் தலைமையில் 'டீம்'
ஓட்டு எண்ணும் மையம் தயார்படுத்த பணிகள் 'விறுவிறு':துணை கமிஷனர் தலைமையில் 'டீம்'
UPDATED : பிப் 26, 2024 02:05 AM
ADDED : பிப் 25, 2024 11:07 PM

கோவை;லோக்சபா தேர்தல் பணிகள், மாவட்டத்தில் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளன. கோவை லோக்சபா தொகுதியில், பதிவாகும் ஓட்டுகளை எண்ணும் மையத்தை தயார்படுத்தும் பொறுப்பு, மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார் தலைமையிலான குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவை லோக்சபா தேர்தல் பணிகள், துரிதகதியில் நடந்து வருகின்றன. ஜி.சி.டி., கல்லுாரி வளாகத்தில், ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்படுகிறது. ஒரு கட்டடத்தில் இரண்டு சட்டசபை தொகுதிகள் வீதம், மூன்று கட்டடத்தில் ஓட்டுகள் எண்ணப்படும்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாடு இயந்திரங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைக்க 'ஸ்ட்ராங்' ரூம் ஏற்படுத்துதல், முகவர்கள் வந்து செல்லும் வழி, போலீஸ் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் மின் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த, மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார் தலைமையில் குழு அமைத்து, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.
இவர்களது பணிகளுக்கு உதவிகரமாக இருக்க, உதவி நிர்வாக பொறியாளர் எழில், உதவி வருவாய் அலுவலர் மணி மற்றும் மாநகராட்சி, பொதுப்பணித்துறை, நில அளவைத்துறையை சேர்ந்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.
'ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கான வரைபடம் மற்றும் வழித்தடம் தயாரிக்க வேண்டும். ஓட்டு எண்ணுவதற்கு எத்தனை ஊழியர்கள் தேவை என்பதை கணக்கிட்டு முன்மொழிவு சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக, தேர்தல் நடத்தும் அலுவலருடன் இணைந்து ஸ்ட்ராங் ரூம், கூடுதல் ஸ்ட்ராங் ரூம் ஏற்படுத்த வேண்டும்.
அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். 'மீடியா சென்டர்' உருவாக்க வேண்டும். தேர்தல் முடிவுகளை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
குடிநீர், கழிப்பறை, சாமியானா மற்றும் பேரிகார்டு உள்ளிட்டவை வைத்திருக்க வேண்டும்' என, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

