/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆறு விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த இளம் வீரர்
/
ஆறு விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த இளம் வீரர்
ஆறு விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த இளம் வீரர்
ஆறு விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த இளம் வீரர்
ADDED : ஜூன் 16, 2025 09:42 PM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் இரண்டாவது டிவிஷன் போட்டிகள், பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்., விஜய் ஐ.சி.எஸ்., உட்பட பல்வேறு மைதானங்களில் நடக்கிறது. இதில், விஜய் கிரிக்கெட் கிளப் அணியும், காஸ்மோ வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் மோதின.
பேட்டிங் செய்த விஜய் கிரிக்கெட் கிளப் அணியினர், 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 220 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் கண்ணன், 60 ரன்களும், அன்பு, 56 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர்களான ரமேஷ் நான்கு விக்கெட்களும், கவுதம் மூன்று விக்கெட்களும் எடுத்தனர்.
காஸ்மோ அணியினர், 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 151 ரன்கள் எடுத்தனர். வீரர் கவுதம், 53 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தார். எதிரணி வீரர் டைசன் ஜோசப் நான்கு விக்கெட்கள் வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
மூன்றாவது டிவிஷன் போட்டியில், ஸ்ரீ சக்தி ஐ.இ., மற்றும் தொழில்நுட்ப கிரிக்கெட் கிளப் அணியும், கோவை லெஜண்ட்ஸ் கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின. பேட்டிங் செய்த, ஸ்ரீ சக்தி அணியினர், 38 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 95 ரன்கள் எடுத்தனர்.
எதிரணி வீரர் சதீஷ்குமார் ஆறு விக்கெட்கள் வீழ்த்தினார். கோவை லெஜண்ட்ஸ் அணியினர், 21 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 96 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர் நரசிம்மன், 54 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.