/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கும்பாபிஷேகத்தை ஒட்டி தீர்த்தக் குட ஊர்வலம்
/
கும்பாபிஷேகத்தை ஒட்டி தீர்த்தக் குட ஊர்வலம்
ADDED : நவ 01, 2025 11:38 PM

சோமனூர்: ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதையொட்டி தீர்த்தக் குட ஊர்வலம் நேற்று நடந்தது.
சோமனூர் அடுத்த ராமாச்சியம் பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பழமையானது. இங்கு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
மதியம், 2:00 மணிக்கு சோழீஸ்வரர் கோவிலில், பல்வேறு புனித இடங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தக் குடங்களுக்கு, பூஜைகள் செய்யப்பட்டன. மேளதாளத்துடன் ஏராளமான பெண்கள் தீர்த்தக் குடங்களை எடுத்து ஊர்வலமாக மாகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல், முதல்கால ஹோமம் துவங்கியது. நான்கு கால ஹோமம் முடிந்து, நாளை காலை, 9:30 மணிக்கு, ஸ்ரீ மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

