/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைநீர் வடிகாலுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவு
/
மழைநீர் வடிகாலுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவு
மழைநீர் வடிகாலுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவு
மழைநீர் வடிகாலுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க உத்தரவு
ADDED : நவ 01, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மாநகராட்சி கிழக்கு மண்டலம், 9வது வார்டு பகுதியில் மேயர் ரங்கநாயகி நேற்று ஆய்வு செய்தார். அங்குள்ள அம்பேத்கர் நகரில் அங்கன்வாடி மையம் அமைப்பது குறித்தும், காமாட்சி அம்மன் கோவில் வீதியில் குடிநீர் திட்ட பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, காமாட்சி அம்மன் கோவில் வீதியில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, புதிதாக மழைநீர் வடிகால் அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரிக்கவும் அறிவுறுத்தினார். வேளாங்கண்ணி நகரில் தார் ரோடு, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் ஆய்வு செய்த அவர், பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களை அறிவுறுத்தினார்.