ADDED : ஏப் 08, 2026 06:36 AM
அ நிறம் | அளவு
கோவை: சிவானந்தா காலனி, முதல் வீதியை சேர்ந்தவர் கேதன். காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் வெள்ளி பொருட்கள் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி சென்றார்.
மறுநாள் மீண்டும் திறந்து வியாபாரம் செய்தார். அப்போது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சில வெள்ளி பொருட்களை காணவில்லை. கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, இரு மர்ம நபர்கள் கடையின் பின்பக்கம் பொருத்தப்பட்டி ருந்த ஏ.சி., இயந்திரத்தை உடைத்து அதன்வழியாக நுழைந்து திருடியது தெரிந்தது. காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
