/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் திருட்டு
/
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் திருட்டு
ADDED : நவ 03, 2024 10:39 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி - கோவை ரோட்டில், பொதுப்பணித்துறை முகாம் பிரிவு அலுவலக கட்டுப்பாட்டில் ஆய்வு மாளிகை உள்ளது.
இந்த வளாகத்திற்குள், அரசு அலுவலர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் தங்குவதற்கான அறைகள் மட்டுமின்றி, உதவிசெயற்பொறியாளரின் அலுவலகம் எண் 2, பாலக்காடு சாலை முகவரியில் செயல்பட்டும் வருகிறது.
இந்நிலையில், இல்லக்காப்பாளர் பாண்டியன், கடந்த, 1ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, அலுவலகத்தை பார்வையிடச்சென்றுள்ளார். அப்போது, அலுவலகக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.
இதையடுத்து, உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். மேலும், கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அலுவலகத்திற்குள் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, இரண்டு லேப்டாப், ஜீப் சம்பந்தப்பட்ட பதிவேடுகள், அலுவலக கோப்புஆவணங்கள், திருடு போயிருப்பதை கேட்டறிந்தனர் தொடர்ந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.