/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அன்றும், இன்றும், என்றும்...' கண்ணதாசனுக்கு புகழாரம்
/
'அன்றும், இன்றும், என்றும்...' கண்ணதாசனுக்கு புகழாரம்
'அன்றும், இன்றும், என்றும்...' கண்ணதாசனுக்கு புகழாரம்
'அன்றும், இன்றும், என்றும்...' கண்ணதாசனுக்கு புகழாரம்
ADDED : நவ 04, 2024 05:51 AM

கோவை ; ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கவியரசு கண்ணதாசனை கொண்டாடும் வகையில், கிக்கானி பள்ளி அரங்கில் இரண்டு நாட்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இரண்டாம் நாளான நேற்று, வீடு என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா பேசுகையில், ''வீடு, உறவுகள் குறித்து கண்ணதாசன் பல்வேறு பாடல்களில் எழுதியுள்ளார். நிபந்தனையற்றதாக இருப்பதே உறவு என கவிதைகளில் எழுதியவர் கண்ணதாசன். 'மனிதன் வாழ்வில் வந்த துன்பன் எல்லாம் மனதினால் வந்த நோய்' என எழுதினார்,'' என பேசினார்.
தொடர்ந்து பேசிய பர்வீன் சுல்தானா, ''பிரபஞ்சம் சொல்வதை எழுதி மக்களுக்கு தெரிவிப்பவர்களே கவிஞர்கள். அப்படி, பலவற்றை எழுதிய கண்ணதாசனின் கவிதைகளை படிக்கும்போது இன்பம் கூடுகிறது.
அவரின் எழுத்து அன்றும், இன்றும், என்றும் இருந்துகொண்டே தான் இருக்கும். கவிஞர்களுக்கு மரணம் இல்லை,'' என்றார்.