/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்
/
அரங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED : பிப் 27, 2024 11:16 PM

மேட்டுப்பாளையம்:காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மக தேர்த்திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, அரங்கநாத பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார்.
தோலம்பாளையம் சாலையில் உள்ள கருட தீர்த்த தெப்பக்குளத்தில், தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பக் குளக்கரையில் சுவாமிக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பின்பு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், அரங்கநாத பெருமாள் பவனி வந்தார்.
அப்போது பஞ்ச சுத்த ஜபம், உபநிஷத் திருப்பல்லாண்டு ஆகியவை வாசிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மேற்கு மற்றும் வடக்கு ரத வீதிகள் வழியாக கோவிலை அடைந்தார். நேற்று சந்தான சேவை நடைபெற்றது. இன்று நிறைவு விழா நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் ஸ்தலத்தார் திருமலை நல்லான் சக்கரவர்த்தி, வேதவியாசர் பட்டர், செயல் அலுவலர் லோகநாதன், அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் எம்.எம். ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

