/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுத்தம் செய்யப்படும் அரங்கநாதர் கோவில் தெப்பக்குளம்
/
சுத்தம் செய்யப்படும் அரங்கநாதர் கோவில் தெப்பக்குளம்
சுத்தம் செய்யப்படும் அரங்கநாதர் கோவில் தெப்பக்குளம்
சுத்தம் செய்யப்படும் அரங்கநாதர் கோவில் தெப்பக்குளம்
ADDED : ஜன 08, 2025 11:25 PM

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தெப்பக்குளத்தை அரங்கநாதர் கோவில் நிர்வாகம் மற்றும் காரமடை நகராட்சி அலுவலர்கள் இணைந்து நேற்று சுத்தம் செய்தனர்.
காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமானது காரமடை தெப்பக்குளம். இந்த தெப்பக்குளத்தை கருடாழ்வார் தீர்த்தம் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.
இன்னும் சில நாட்களில் காரமடை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து, தெப்பக்குளத்தை சுத்தம் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. தற்போது தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் மோட்டார் வாயிலாக உறிஞ்சப்பட்டு, அங்கேயே சுத்திகரிப்பு செய்து, மீண்டும் தெப்பக்குளத்தில் விடப்படுகிறது. மேலும் தெப்பக்குளத்தின் கரையோர பகுதிகளில் உள்ள செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. தெப்பக்குளம் தண்ணீரில் உள்ள குப்பைகள் அகற்றப்படுகின்றன.
இப்பணியை காரமடை நகராட்சி மற்றும் கோவில் நிர்வாக அலுவலர்கள் மேற்கொண்டனர்.----