/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏற்கனவே ஐந்து கடை இருக்கு; மேலும் ஒரு மதுக்கடை எதுக்கு
/
ஏற்கனவே ஐந்து கடை இருக்கு; மேலும் ஒரு மதுக்கடை எதுக்கு
ஏற்கனவே ஐந்து கடை இருக்கு; மேலும் ஒரு மதுக்கடை எதுக்கு
ஏற்கனவே ஐந்து கடை இருக்கு; மேலும் ஒரு மதுக்கடை எதுக்கு
ADDED : ஆக 21, 2025 09:29 PM
கோவை; கோவை தடாகம் ரோட்டில் கோவில்மேடு உள்ளது. இங்கிருந்து, கே.கே.புதுார் செல்லும் சாலையில், இரண்டு மதுக்கடைகள் உள்ளன.
இவை தவிர தடாகம் ரோட்டில் இரண்டு கடைகள், தனியார் 'பார்' ஒன்று செயல்படுகின்றன.
தற்போது கோவில்மேட்டில் இருந்து மேற்கு திசையில் செல்லும் சாஸ்திரிரோட்டில், எப்.எல்.2 என்றழைக்கப்படும் மனமகிழ் மன்றம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஒரே பகுதியில் ஐந்து மதுக்கடைகள் செயல்படுவதால், மாலை நேரங்களில் மது அருந்த வருவோரால், அப்பகுதி பெண்கள், மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதே பகுதியில் கோவில்கள், பள்ளிகள், நுாலகங்கள் இருக்கின்றன. இச்சூழலில், மன மகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக்கடை திறப்பதற்கான பணிகள் நடப்பதால், கோவில்மேடு பகுதி மக்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
கலா மன்ற சமூக செயற்பாட்டு களம், கோவில்மேடு ஊர் நிர்வாக கமிட்டி, கோவை மாவட்ட வ.உ.சி., அமைப்பு சாரா மற்றும் கட்டுமான அனைத்து தொழிலாளர் சங்கம், கோவில்மேடு இளைஞர் மன்றம், கண்ணப்ப நகர், யாதவர் இளைஞர் அணி, தவசி நகர், சிவகாமி நகரை சேர்ந்த மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர்.

