/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லார்குடியில் வசதியில்லை; பழங்குடியின மக்கள் கண்ணீர்
/
கல்லார்குடியில் வசதியில்லை; பழங்குடியின மக்கள் கண்ணீர்
கல்லார்குடியில் வசதியில்லை; பழங்குடியின மக்கள் கண்ணீர்
கல்லார்குடியில் வசதியில்லை; பழங்குடியின மக்கள் கண்ணீர்
ADDED : டிச 04, 2024 10:11 PM

வால்பாறை; கல்லார்குடி செட்டில்மென்ட் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ளது கல்லார்குடி செட்டில்மென்ட். இங்கு, 25 குடும்பத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள், பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 2022ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் மண்ணில் புதைந்தன.
இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டத்துக்கு பின், தெப்பக்குளம் மேட்டுப்பகுதியில் அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக வசிக்கின்றனர். இந்நிலையில் இந்த செட்டில்மென்ட் பகுதிக்கு செல்லும் ரோடு, கரடு, முரடாக உள்ளதால், பழங்குடியின மக்கள் நடந்து செல்ல முடிவதில்லை. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து, கல்லார்குடி காடர் இன பழங்குடியின தலைவி ராஜேஸ்வரி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கல்லார்குடியில் வனத்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட தெப்பக்குளம் மேட்டில், மண் வீடுகளை கட்டி இயற்கை விவசாயம் செய்து வாழ்கிறோம். அரசின் சார்பில் வழங்கப்படும் எந்த சலுகையும் எங்களுக்கு கிடைப்பதில்லை. எனவே கல்லார்குடியில் தமிழக அரசின் சார்பில் தெப்பக்குளமேட்டில் கான்கிரீட் விடுகள் கட்டித்தர வேண்டும். தாய்முடி சந்தனமாரியம்மன் கோவிலில் இருந்து கல்லார் குடி வரையிலான, 3 கி.மீ,. துாரத்துக்கு ரோடு அமைத்துத்தர வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.